சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் கூடலூர் ஊராட்சி பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 பேர் பணித்தள பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு வேலை பார்த்து வந்தனர். இதற்கிடையே பணித்தள பொறுப்பாளர்களுக்கு மாற்றாக 3 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளருக்கும், ஏற்கனவே பணி செய்து வந்த பொறுப்பாளருக்கும் பணி வழங்குவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க்கூறி 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள், கூடலூர் ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னசாமி, பணியாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு கலைந்து சென்றனர்.