சேலம் பெரியார் பல்கலைக்கழக ெபாறுப்பு துணைவேந்தருக்கு
எதிராக தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்;
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகநாதன் கடந்த 19-ந் தேதி பணி நிறைவு பெற்றார். அவருக்கு பதிலாக தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக தொழிாளர் சங்கத்தினர் அவர் பொறுப்பு துணைவேந்தர் பதவியில் இருந்து விலகக்கோரி பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிலாளர் சங்க தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் கிருஷ்ணவேணி, தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.