பெரம்பலூர்,குன்னம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன் கலந்து கொண்டு 2026- சட்டமன்ற தேர்தல் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைய வேண்டும் அதற்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்;

Update: 2025-05-22 11:23 GMT
பெரம்பலூர்,குன்னம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது! தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன் கலந்து கொண்டு 2026- சட்டமன்ற தேர்தல் குறித்து பேசினார். இதில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை.பாஸ்கர், நூருல்ஹிதாஇஸ்மாயில், சன். சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்‌ என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளரகள் டாக்டர் செ.வல்லபன், நீ.ஜெகதீஷ்வரன், பூலாம்பாடி பேரூர் கழகச் செயலாளர் செல்வலெட்சுமி சேகர், லெப்பைக்குடிக்காடு பேரூர் கழகச் செயலாளர் ஏ.எஸ்.ஜாகிர் உசேன், பெரம்பலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தினேஷ், குன்னம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சிவனேசன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், பெரம்பலூர் நகர ஒருங்கிணைப்பாளர் தினேஷ், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுல்தான், வேப்பத்தட்டை கிழக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News