நத்தக்காடையூர் கரும்பு தோட்டத்தில் பற்றி எறிந்த தீ
நத்தக்காடையூர் கரும்பு தோட்டத்தில் பற்றி எறிந்த தீ காங்கேயம் தீயணைப்பினால் போராடி தீயை அணைத்தனர்;
நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை ஊராட்சி குட்டப்பாளையம், வேலாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயி. இவர் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்து உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை கரும்பு பயிரின் ஒரு பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது.இது பற்றி தகவல் அறிந்த காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ½ ஏக்கர் பரப்பிலான கரும்பு பயிர்கள் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் தீ விபத்தில் சேதமடைந்த கரும்பு பயிர்கள் மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.