கூடலுார் பகுதியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவர் கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாகப் பணிபுரிகிறார். இவருக்கும் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் குபேந்திரன் என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்து வந்தது. இதன் காரணமாக ஏப்.23 அன்று குபேந்திரன் அரிவாளால் ஏட்டு அம்பிகாவை வெட்டினார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் குபேரந்திரன் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.