தேனி கனராவங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் சணல் பை தயாரித்தல் பயிற்சி மே.27 முதல் ஜூன்.9 வரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.