தேனி மாவட்டத்தில் 11.38 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7490 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார். அனைவரும் வருகின்ற தேர்தலில் ஓட்டு அளிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றிக் கலெக்டர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் SAKSHAM ECI செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.