காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை!
காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்த சபீனா பானு (33) கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (35), சபீனா பானுவை காதலித்து வந்துள்ளார். சபீனா பானு 2 மாதமாக பேசாததால், ஆத்திரமடைந்த சுரேஷ் சபீனா பானு வீட்டுக்கு சென்று இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துவிட்டு வீட்டிற்கு சென்று சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.