குப்பைகள் அகற்றும் பணி- மேயர் ஆய்வு!
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் தூய்மை பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்ட கோட்டை பின்புறம் உள்ள சாலையோரம், குப்பைகள் மற்றும் புற்கள் அகற்றும் பணி மாநகராட்சி பணியார்களால் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் நேரில் சென்று பணி எவ்வாறு நடைபெறுகிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். பணிகளை நேர்த்தியாக செய்யும்படி மேயர் அறிவுத்தினார்.