சூளகிரி அருகே லாரி மோதி குழந்தை உயிரிழப்பு.

சூளகிரி அருகே லாரி மோதி குழந்தை உயிரிழப்பு.;

Update: 2025-05-24 00:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள உத்தனப்பள்ளி அடுத்த அளேசீபம் கிராமம், காந்தி நகர் பகுதியைச் சோ்ந்தவா் அஜித்.இவருடைய ஒன்றரை வயது மகள் ஷன்மிதா, இவரது வீட்டின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி குழந்தை மீது மோதியது. இதில் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த வந்த உத்தனப்பள்ளி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News