அதிமுகவினரின் திண்ணை பிரச்சாரம்
மதுரை மேலூர் அருகே அதிமுகவினரின் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.;
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி மேலூர் தெற்கு ஒன்றியம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணைப் பிரச்சாரம் கொட்டகுடியில் நேற்று (மே.23) நடைபெற்றது. இதற்கு மேலூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மன் கே.பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ கே.தமிழரசன் தலைமை தாங்கி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுனர் அணி செயலாளர் அன்புச்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் மீரா உசேன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவாதவூர் இளவரசன், கிடாரிபட்டி சுரேஷ், பனங்காடி சுப்புராமன், தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் உதயகுமார், நகர்மன்ற உறுப்பினர் திவாகர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.