சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 30). இவர் பீரோ பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று முனியப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். முனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் முனியப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.