தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
கன்னிவாடி பேரூர் கழகத்தில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்;
தி.மு.க. மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிவாடி பேரூர் கழகத்தில் இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய இளைஞர் அணி அமைப்பாளராக செண்பகவேல், துணை அமைப்பாளர்களாக சதீஷ்குமார், செல்வக்குமார், சிவக்குமார் மற்றும் ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ் உடன் இருந்தார்.