அருள்மிகு விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை!
அருள்மிகு விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியிலுள்ள அருள்மிகு விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்கரித்து, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.