வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு!
ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள, வெங்கடேச பெருமாளுக்கு சனிக்கிழமையை முன்னிட்டு இன்று பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு,வெள்ளி கவச அலங்காரத்தில். மகா தீப ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.