காதலியை பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
காதலியை பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை வெள்ளகோவில் காவல்துறை விசாரணை;
நேபாளம் பில்பூர் மாவட்டம் பகார் பகுதியை சேர்ந்தவர் மோதலால் ஜான். இவரது மகன் சந்தோஷ் குமார் (வயது 22) இவருடைய அண்ணன் சாகர் (வயது 25) திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நாச்சிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு தனது அண்ணன் வேலை பார்க்கும் மில்லுக்கு சந்தோஷ்குமார் வந்து வேலையில் சேர்ந்துள்ளார். நேற்று தான் தங்கியிருந்த மில் குடியிருப்பு அறையில் துணியால் தூக்குப்போட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், சந்தோஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். சந்தோஷ்குமார் நேபாளத்தில் தனது ஊரில் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.தற்போது வேலை காரணமாக பிரிந்து வந்த ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. புகாரின் பேரில் வெள்ளகோவில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.