தேசிய கொடியுடன் பாஜகவினர் ஊர்வலம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் மூவர்ண கொடியேந்தி ஊர்வலமாக சென்றனர்.;

Update: 2025-05-25 08:19 GMT
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிப்பயணம் மூவரண தேசியக்கொடி யாத்திரை மதுரை பாஜக மேற்கு மண்டலம் சார்பில் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது. ஜிஎஸ்டி சாலை வழியாக 16ஆம் கால் மண்டபம் மேலரத , வீதி ,கீழாத வீதி வழியாக மீண்டும் 16ஆம் கால் மண்டபத்தில் யாத்திரையை நிறைவு செய்தனர். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிவாசல் இருக்கும் பெரிய ரத வீதியில் பாஜகவினரின் யாத்திரைக்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . இந்த யாத்திரை பேரணியில் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொள்ள வந்தடைந்தார். பாஜக வினர் தடையை மீறி பள்ளிவாசல் பகுதியில் செல்லாமல் இருக்க இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் இருந்தனர். மேலும் வேலூர் இப்ராஹிம் தடையை மீறி பள்ளிவாசல் பகுதியில் சென்றால் போலீசார் கைது செய்யவும் தயாராக இருந்தனர். இந்நிலையில் பாஜகவினர் பேருந்து நிலையத்திலிருந்து பெரிய ரவிதி கீழ ரதவீதி மேல ரத வீதி வழியாக 16 கால் மண்டபத்தை அடைந்து அமைதியாக செந்தூர் யாத்திரை முடித்தனர்.

Similar News