கூடலூரை சேர்ந்தவர் பிச்சையம்மாள் (77). இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டில் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தீ பிச்சையம்மாள் மீது பற்றியதில் அவரது உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (மே.24) உயிரிழந்தார். விபத்து குறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை.