தேசிய கொடியுடன் பாஜகவினர் ஊர்வலம்
மதுரை அருகே பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.;
சிந்தூர் ஆப்ரேஷன் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் இந்த மாபெரும் வெற்றியை பெற்றுதந்த ராணுவ வீரர்களுக்கும் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இன்று 25.5.2025 மதுரை மேற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய தலைவர் திரு.ஜோதி பாசு அவர்கள் தலைமையில் ஊமச்சிகுளம் இந்திரா நகர் தொடங்கி வீரபாண்டி ரோடு வரை மூவர்ணகொடி பேரணி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் திரு.ராஜசிம்மன் அவர்கள் கலந்து கொண்டார்