வேலூரில் பாஜகவினர் பேரணி!
பாஜகவினர் வேலூர் பலவன்சாத்து குப்பம் முதல் பாகாயம் வரை தேசிய கொடியை ஏந்தி பேரணியாக சென்றனர்.;
பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் போரில், இந்தியா வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக, இந்திய ராணுவம் மற்றும் இந்திய முப்படைகளுக்கு நன்றி தெரிவித்து வேலூர் பாஜக தெற்கு மண்டல தலைவர் சுரேஷ் மற்றும் மண்டல பொதுச்செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் இன்று பாஜகவினர் வேலூர் பலவன்சாத்து குப்பம் முதல் பாகாயம் வரை தேசிய கொடியை ஏந்தி பேரணியாக சென்றனர்.