அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை சேர்க்க வேண்டுகோள்!

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என பெற்றோருக்கு ஆட்சியர் சுப்புலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2025-05-25 16:25 GMT
வேலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என பெற்றோருக்கு ஆட்சியர் சுப்புலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தற்போது அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, பெற்றோர்கள் தங்களது 2 - 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அடுத்த மாதத்தில் (ஜூன்) அங்கன்வாடி மையத்தில் தவறாமல் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News