ஆலத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.கே கர்ணன், அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் வயலப்பாடி விஜிஎம் (எ) வெங்கடாஜலம் இல்ல திருமண விழா
மணமக்களை வாழ்த்திய அதிமுக நிர்வாகிகள்;
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நத்தக்காடு கிராமத்தைச் சேர்ந்த சி.கிருஷ்ணசாமி உடையார் -அகிலாண்டம் இவர்களின் மகன் வழிப் பேரனும், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா கடம்பன்குடி கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் உடையார் -ராசம்மாள் இவர்களின் மகள் வழிப் பேரனும், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் - முன்னாள் மாவட்ட கவன்சிலர் செல்வி ஆகியோரின் மகனும், இன்ஜினியரும், என்.கே.பி கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் உரிமையாளருமான பிரபாகரனுக்கும்.. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் உடையார் -அஞ்சலையம்மாள் இவர்களின் மகன் வழி பேத்தியும், பெரியசாமி உடையார் - பார்வதி மற்றும் நடராஜ் உடையார் அம்மாகண்ணு இவர்களின் மகள் வழி பேத்தியும், பெரம்பலூர் அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணைசெயலாளர் விஜிஎம் (எ) வெங்கடாசலம் - செல்வி ஆகியோர்களின் மகளும், வழக்கறிஞருமான அருணாவிற்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டு, திருமணம் மற்றும் வரவேற்பும் பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை நடைபெற்ற நிகழ்வில் அதிமுக தொண்டர்கள் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.