திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்க நகை கொள்ளை போலீசார விசாரணை;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 51 ஆயிரம் பணம் மற்றும் 6 1/2 தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களாலா பரபரப்பு* திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட தில்லைநகர் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரின் மகன் வெங்கட்ராமன் (32) இவர் தன்னுடைய குடும்பத்துடன் மலையனூர் கோயிலுக்கு சென்ற நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கேட்டிற்கு போடபட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 51 ஆயிரம் பணம் , 6 1/2 தங்க நகை ஆகியவற்றை மர்மநபர் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வெங்கடராமன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.