அறந்தாங்கியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரச்சார கூட்டம்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர திமுக சார்பாக என் வாக்குச்சாவடி வெற்றி பாக்கு சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-16 03:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர திமுக சார்பாக என் வாக்குச்சாவடி வெற்றி பாக்கு சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அறந்தாங்கி நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர் அவைத் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வைத்தார். மேலும்  இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் வாக்காளர்களை சந்தித்து நடைபெற உள்ள தேர்தலில் அரிய வாக்குகளை திமுகவிற்கு பெற வேண்டுமென நகர செயலாளர் ராஜேந்திரன் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை கேட்டுக் கொண்டார். தொடர்ந்து என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூட்டத்தில் நகர பொருளாளர் அனந்தராமன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News