திமுக புதிய அலுவலகத்திற்கு கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டிய அமைச்சர் ரகுபதி!!
எட்டாம்மாண்டபடி பஸ் நிலையத்தில் நிறுவப்பட்ட அரிமளம் ஒன்றியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பேரூர் கழக அலுவலகத்தை அமைச்சர் எஸ் ரகுபதி குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.;
By : King 24x7 Desk
Update: 2025-12-16 03:19 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பேரூர் கழக அலுவலகம் எட்டாம்மாண்டபடி பஸ் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதனை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ் ரகுபதி குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதன் பிறகு அமைச்சர் ரகுபதி எட்டாம் மண்டகப்படியில் அன்னம் தரும் அன்புக்கரம் விடியல் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில்திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், திமுக.தெற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகரச் செயலாளர் நாசர் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.