சாலை விபத்தில் வாலிபர் பலி

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள வ உ சி மேம்பாலத்தில் நேற்று இரவு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்;

Update: 2025-05-26 07:24 GMT
மதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து காளவாசல் நோக்கி நேற்று (மே.25) இரவு 11.45 மணியளவில் பல்சர் பைக்கில் அதிவேகமாக ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (28) வாகனத்தை பைபாஸ் ரோடு வ.உ.சி மேம்பாலத்தில் ஓட்டி வந்துள்ளார். இந்த பாலத்தில் இறக்கத்தில் வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலை குழைந்து, பாலத்தின் தடுப்பு மீது மோதி, சில அடி தூரம் இழுத்து சென்று தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக 108 அவசரகால் உறுதிக்கு தகவல் தெரிவித்து, காளவாசல் பகுதியில் இருந்து வந்த 108 அவசர கால ஊர்தி வாகனம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இது சம்பவம் குறித்து, மதுரை எஸ். எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன் இதே பாலத்தில் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News