ஸ்ரீ ஆதி வராஹி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜை!
த்ரீஸ்தலம் ஸ்ரீ ஆதி வராஹி அம்மன் திருக்கோவிலில் இன்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் அமைந்துள்ள த்ரீஸ்தலம் ஸ்ரீ ஆதி வராஹி அம்மன் திருக்கோவிலில் இன்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் அருள்மிகு த்ரீசக்தி வராஹி அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.