விராலிமலை:மணிகண்டம் ஒன்றியம் துறைக்குடி ஊராட்சி கொழுக்கட்டக்குடியை சேர்ந்தவர் பெரமன்(50). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 24ம் தேதி மாலை பைக்கில் ஆவூர் நோக்கி சென்றார். ஆவூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது திருச்சியில் இருந்து ஆவூர் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் காயமடைந்த பெரமன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.