ஓடைப்பட்டி கிராமத்தில் "உழவரைத் தேடி வேளாண்மை துறை"

மதுரை திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஓடைப்பட்டி கிராமத்தில் "உழவரைத் தேடி வேளாண்மை துறை" நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2025-05-29 12:29 GMT
நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள் சார்பு துறைகளான கால்நடை பராமரிப்புத் துறை கூட்டுறவுத்துறை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர்களால் உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் எடுத்து கூறி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மட்டும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வட்டாரத்தில் இரு கிராமங்களில் முகாம்கள் நடைபெறும். அதனடிப்படையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த அலுவலர்கள் கிராமங்களில் நடக்கும் முகாம்களில் கலந்து கொள்வார்கள் இத்திட்டம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினால் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளிக்குடி அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் இன்று (மே.29)நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கள்ளிக்குடி வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News