திருச்சியில் நடைபெற உள்ள மாபெரும் பேரணி குறித்து விளக்க கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-05-29 17:46 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்டம் வேப்பந்தட்டை ஒருங்கிணைந்த ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள விசிக அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் வெற்றியுடன், இடி முழக்கம். ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேயர் ஒருங்கிணைப்பாளர் மேலிட பொறுப்பாளர் பா தாமரைச்செல்வன் மற்றும் தயா தமிழன்பன், பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் மன்னர் மன்னன், ஆகியோர் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மத சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் பேரணி குறித்து விளக்கி எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் வேப்பநட்டை ஒன்றிய பொருளாளர் சண்முகம், தமிழ் குமரன் பாவாணன், ரேணுகா வேல்முருகன் சுழி ஐயம்பெருமாள் பாலன் வெற்றிவேல் வனிதா ரம்யா ராஜேந்திரன் காட்டு ராஜா பாலசுப்பிரமணியன் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News