திமுக பொதுக்குழு நடக்கும் இடத்தினை ஆய்வு செய்து அமைச்சர்கள்
மதுரையில் திமுக பொதுக்குழு நடக்கும் இடத்தினை அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்தனர்;
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் வரும் ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. முதல்வர் தலைமை வகிக்கும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து கவனித்து மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று (மே.29) மாலை திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினார். உடன் வணிக துறை அமைச்சர் மூர்த்தி, சேடப்பட்டி மணிமாறன், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன்,மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.