ஆடு திருட்டிய நான்கு குற்றவாளிகளை கைது.
நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்;
ஆடு திருட்டிய நான்கு குற்றவாளிகளை கைது. பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் வ.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த 1.செந்தில் நாதன் (33) த/பெ செல்வராஜ், வடக்கு காட்டு கொட்டாய், பசும்பலூர், 2.செல்வக்குமார் (33), த/பெ விஸ்வநாதன், போஸ்ட் ஆபிஸ் தெரு, பசும்பலூர், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம். ஆகிய இருவரும் தங்கள் வயலில் உள்ள ஆட்டு கொட்டகையில் உள்ள ஆட்டுக்கு இரவு தீனி வைத்து விட்டு, மறுநாள் வந்து பார்க்கும் போது 1.செந்தில் நாதன் என்பவரின் 2 ஆடுகளும் மற்றும் 2.செல்வக்குமார் என்பவரின் 4 ஆடுகளும் காணவில்லை என்று வ.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் தனிபடை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடி வந்தனார். மேலும் அதே ஊரை சேர்ந்த நான்கு நபர்களை சந்தேக பேரில் தனிப்படையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் 1.கிஷோர் (27) த/பெ காசி, 2.மணிகண்டன்(20) த/பெ அழகுதுரை, மற்றும் இரண்டு இளஞ்சிறார்கள் ஆகிய நான்கு எதிரிகளிடமிருந்து 4 ஆடுகள் மற்றும் ஆடு திருட பயன்படுத்திய TN 50 Bu 4239 TATA ACE ஆகியவை பறிமுதல் செய்து 4 எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த வ.களத்தூர் காவல் துறையினர்.