மதுரையில் முதல்வர் வருகையால் போக்குவரத்து மாற்றம்.

மதுரையில் முதல்வரின் "ரோட் ஷோ" நடைபெறும் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.;

Update: 2025-05-31 02:44 GMT
மதுரைக்கு இன்று( மே.31)வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதல்வர் மாலையில் அவனியாபுரம் பகுதியில் தொடங்கும் "ரோட் ஷோ" நிகழ்வில் கலந்து கொள்வதால் போக்குவரத்து காவல்துறை சில சாலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் வாகன இயக்கத் தடை: சாலைப் பேரணி வழித்தடம்: அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலையிலிருந்து ஜெயவிலாஸ் சந்திப்பு வரை நடைபெறும் சாலைப் பேரணியின்போது, குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை. தடைசெய்யப்பட்ட பகுதிகள்: பெருங்குடி சந்திப்பு, வில்லாபுரம் ஆர்ச், ஜெயவிலாஸ் சந்திப்பு, ஜெய்ஹிந்துபுரம், சந்தர்ராஜபுரம், மாடக்குளம், பழங்காநத்தம், பைபாஸ் ரோடு, காளவாசல், திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது. நகருக்குள் நுழைய தடை: பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம் வழியாக நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மாற்றுப் பாதைகள்: விமான நிலையம் செல்பவர்கள்: தெற்குவாசல் - சிந்தாமணி ரிங் ரோடு வழியாகச் செல்லலாம். திருப்பரங்குன்றம் செல்பவர்கள்: அருப்புக்கோட்டை ரிங் ரோடு வழியாகச் செல்லலாம். இது போல சிலை திறப்பு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Similar News