கிணற்றின் மூழ்கி இரு சிறுமிகள் பலி

மதுரை அழகர் கோயில் அருகே கிணற்றில் குளிக்க சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.;

Update: 2025-05-31 02:47 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகள் அன்னலட்சுமி (12) ஏழாம் வகுப்பு படித்தார். இவர் கோடை விடுமுறைக்காக அழகர்கோவில் அருகேயுள்ள சுந்தரராஜன்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். நேற்று (மே.30) மதியம் அவரும், அதே ஊரைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்த முத்துப்பாண்டி மகள் பிரியாவும்( 14) அங்குள்ள செட்டி கண்மாயில் குளித்தபோது மூழ்கி இறந்தனர். இதனை அறிந்த அப்பன்திருப்பதி போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News