கோவில் பணியாளர்களுக்கு விருந்தளித்த அமைச்சர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற பணியாற்றிய பணியாளர்களுக்கு நேற்று விருந்தளிக்கப்பட்டது.;
அருள்மிகு மீனாட்சி சுந்தரே சுவரர் திருக்கோவில் சித்திரை திருவிழா 2025 சிறப்பாக நடைபெற தங்களது உழைப்பை நல்கிய திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும், திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் அவர்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுடன் இணைந்து நேற்று ( மே.30) மாலை விருந்து அளித்தார். இதில் 400க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.