முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகை. உற்சாக வரவேற்பு.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இரண்டாம் நாள் பயணமாக இன்று மதியம் மதுரை வந்தடைந்தார்.;

Update: 2025-05-31 08:03 GMT
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று (மே.31) மதியம் மதுரைக்கு வந்தடைந்தார். விமான நிலையம் வந்தடைந்த முதல்வரை அமைச்சர்கள் கே என் நேரு ,ஐ பெரியசாமி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சக்கரபாணி, பெரிய கருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜா, சல்மா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் பின்னர் பெருங்குடி அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுக்க சென்றார்.இன்று மாலை ரோட் ஷோ நிகழ்வில் கலந்து கொள்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News