திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் உணவு அமைக்க ஒப்பந்தம்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் உணவகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.;

Update: 2025-05-31 08:48 GMT
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் , செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனம் மற்றும் சென்னை மிஷின் நிறுவனம் இணைந்து மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை மற்றும் ஜான்சிராணி பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி பாதிப்புடையோர் பயன்பெறும் வண்ணம் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் மற்றும் உணவகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தலைமையில்,மேயர் இந்திராணி அவர்கள் முன்னிலையில் இன்று (மே.31) மேற்கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர். ராமசுப்பிரமணியன் அவர்கள், ஆணையாளர் சித்ரா விஜயன்,அவர்கள் ஆகியோர் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். அருகில் தலைமை பொறியாளர் பாபு அவர்கள், துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன் அவர்கள், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

Similar News