அதிமுக பாஜக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

திண்டுக்கல் மாநகராட்சி வரி உயர்வுகளை கண்டித்து அதிமுக பாஜக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு;

Update: 2025-05-31 10:52 GMT
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநக மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற தீர்மான கூட்டத்தில் பாஜக மாமன்ற உறுப்பினர் தனபால், தனது 14வது வார்டு வார்டில் பாதாள சாக்கடையால் கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் ஏற்கனவே ஒதுக்கிய நிதிகளுக்கு பணிகள் நடைபெறவில்லை அனைத்தும் பாதியிலே நிற்கிறது மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது என மாமன்றத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் இல்லையென்றால் மாநகராட்சியின் பணிகள் குறித்து நீதிமன்றம் நாட போவதாகவும் திட்டப் பணிகளை முழுமையாக நிறைவேற்றப்படாததை வலியுறுத்தி பணிகளை கண்காணிக்காத திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிதது செயல்படாத திட்டப் பணிகள் குறித்த பதாதகையை கையில் பிடித்தவாறு வெளிநடப்பு செய்தார். மேலும் திண்டுக்கல் மாநகரப் பகுதியின் முலம் குப்பை வரி, தொழில் வரி உள்ளிட்ட பாதாள சாக்கடைக்கு வரி உயர்வை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ராஜ்மோகன், பாஸ்கரன், சத்தியவாணி, உமா மகேஸ்வரி, ஆகியோர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Similar News