மகளிர் பிரிவின் ஹாக்கி போட்டிகள் தொடங்கியது
திண்டுக்கல் SDAT மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் பிரிவு ஹாக்கி போட்டிகள் தொடங்கியது;
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் கெயின்அப் டெக்னோ லிமிடெட் ஒருங்கிணைந்த மாவட்ட ஹாக்கி கழகம் சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி போட்டிகள் தொடங்கியது. இதில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, வேலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் இருந்து 17 அணிகள் பங்கேற்றன. முதலாம் ஆண்டு நடைபெறும் இட் போட்டியானது தொடர்ந்து மூன்று நாட்கள் நாக்அவுட் முறையில் நடைபெறுகின்றது. முதல் போட்டியாக சென்னை ஐ சி எப் அணியும் திண்டுக்கல் கெயின்அப் அணியும் மோதி விளையாடியது. இந்த போட்டியானது மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் எஸ் எஸ் எம் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகின்றது. இறுதிப்போட்டியானது மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு கோப்பை மற்றும் ரோக்க பரிசு ரூபாய் 30,000, இரண்டாம் பரிசாக கோப்பை மற்றும் சொர்க்கம் ரூபாய் 20000, மூன்றாம் பரிசாக கோப்பை மற்றும் ரூபாய் 15000 நான்காம் பரிசாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். நடுவர்கள்,பயிற்சியாளர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் போட்டிகளை கண்டு ரசித்தனர்.