உற்சாகத்துடன் மதுரையில் "ரோட் ஷோ"
மதுரையில் முதல்வரின் "ரோட் ஷோ" உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.;
மதுரைக்கு இன்று மதியம் வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மாலை 5 மணி அளவில் பெருங்குடி பகுதியிலிருந்து ரோட் ஷோவை தொடங்கினார். அவரை வரவேற்க ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தொண்டர்களும் சாலையின் இரு புறங்களில் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆங்காங்கே வேனிலிருந்து இறங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். சாலையில் நடந்து செல்கையில் அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடன் நடந்து சென்றனர். சுமார் 17 கீ.மீ தூரம் நடைபெறும் ரோட் ஷோவில் ஆங்காங்கே மக்கள் அதிகம் கூடியுள்ள இடங்களில் முதல்வர் வண்டியிலிருந்து இறங்கி நடந்து செல்கிறார்.