வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட சீர் மரபினர் சங்கத் தலைவி.

மதுரை அருகே சீர் மரபினர் சங்கத் தலைவி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.;

Update: 2025-06-01 01:27 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் சீர் மரபினர் நலச்சங்க மாநில தலைவி தவமணி டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் கேட்டு போராடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அவர் இது சம்பந்தமாக முதல்வர் , மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசின் துறைகளுக்கு பல்வேறு மனுக்களை அனுப்பி உள்ளார். பல்வேறு தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மதுரை வரும் தமிழக முதல் வருடம் டிஎன்டி ஒற்றை சான்றிதழ் கேட்டு மனு கொடுக்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்திருந்த நிலையில் இதனை. அறிந்து கொண்ட காவல்துறையினர் அவரை நேற்று (மே.31) வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதனால் அங்கு வந்த தவமணியின் ஆதரவாளர்கள் தவமணி வீட்டின் முன்பு கூடி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் உடனடியாக டிஎன்டி சான்றிதழ் வழங்க கோரிக்கையும் விடுத்தனர்.

Similar News