பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2025-06-01 05:11 GMT
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு உடற்கல்வி, தையல் மற்றும் இசை ஆசிரியர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு (33 உடற்கல்வி ஆசிரியர், 10 தையல் ஆசிரியர் மற்றும் 2 இசை ஆசிரியர்) பணி நியமன கலந்தாய்வு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான பணியிடங்களைத் தேர்வு செய்த 45 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 7 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் இன்று (01.06.2025) மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் .கண்ணப்பன், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) இராஜேந்திரன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News