கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சி செய்த இளைஞர் கைது

திண்டுக்கல்லில் நடந்து சென்ற வாலிபரிடம் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சி செய்த இளைஞர் கைது;

Update: 2025-06-01 07:51 GMT
திண்டுக்கல்லை சேர்ந்து முத்து(30) என்பவர் மேற்கு தாலுகா அலுவலக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சாகுல்அமீது மகன் தாஜுதீன்(27) என்பவர் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி முத்துவிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாக முத்து அளித்த புகாரின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட தாஜிதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News