திண்டிவனத்தில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றும்
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை;
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஜனவரி மாதம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடி கம்பங்கள் 12 வாரங்களுக்குள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று திண்டிவனம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்களை அகற்றினர்.குறிப்பாக ஆரியாஸ் ஓட்டல் அருகில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கொடி கம்பங்களும் அகற்றப்பட்டுள்ளன. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சிமென்ட் பீடங்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர்.