கண்டெய்னர் லாரி மோதியதில் கண்காணிப்பு கேமராக்கள் சாலையில் சிதறியது
கண்டெய்னர் லாரி மோதியதில் கண்காணிப்பு கேமராக்கள் சாலையில் சிதறியது;
திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் பாடி ஏற்றிச் சென்ற லாரி கண்டெய்னர் லாரி மோதல் 1-கோடி ரூபாய் மதிப்புடைய கண்காணிப்பு கேமராக்கள் சாலையில் சிதறியது இரவு நேரத்தில் போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபடாததே விபத்திற்கு காரணம் விபத்து நடந்து 7- மணி நேரத்திற்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விபத்து லாரியை அகற்றவில்லை வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முருகம்பட்டு என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து வந்த கன்டைனர் லாரி இதனை கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிகண்டன் வயது (29) என்பவர் இந்த லாரியில் மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய சிசிடிவி கண்காணிப்பு கேமரா மற்றும் உபகரணங்களை 884 பெட்டிகளாக எடுத்து வந்துள்ளார் சென்னை நோக்கி வந்த இந்த கண்டெய்னர் லாரி மேற்கண்ட இடத்தில் வரும் போது எதிரே ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு செல்வதற்கு மிக அகலமான லாரி நீளமான லாரி டிப்பர் லாரிக்கு இரும்பு பாடி வந்துள்ளது இந்த லாரியும் ஆந்திராவை நோக்கி செல்லும் போது மேற்கண்ட பகுதியில் வரும் பொழுது கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து நடைபெற்றுள்ளது இதில் கண்டெய்னர் லாரி இரும்பு ஒரு பகுதி கிழித்து எறியப்பட்டு கண்டெய்னர் லாரிக்குள் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் உபகரணங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்புடையது சாலையில் சிதறியது அந்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் இதனை அள்ளிச் சென்றுள்ளனர் மிச்சம் மீதி இருக்கும் சிசிடிவி உபகரணங்கள் சாலையில் சிதறி உள்ளது இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மணிகண்டன் படுகாயம் அடைந்த இவர் அந்த பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலையில் சிதறிய சிசிடிவி கேமரா உபகரணங்கள் அனைத்தையும் சாலை ஓரத்தில் அப்படியே ஓரம் கட்டினார்கள் அதற்கு தற்போது பாதுகாப்பு அளித்துள்ளனர் மேலும் விபத்து நடந்து 7-மணி நேரத்திற்கு மேலாக ஜார்க்கண்ட் மாநில லாரி டிப்பர் பாடி சாலை நடுவே 80 சதவீதம் அடைத்து நிற்கவைக்கப்பட்டுள்ளது இதனை அப்புறப்படுத்தாமல் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர் என்று வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு முன்வைத்தனர் மேலும் விபத்திற்கு காரணமான ஜார்கண்ட் மாநில மிக நீளமான இந்த லாரி அதிலிருந்த டிப்பர் லாரி பாடி இருந்து சாலை 60% ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளது தேசிய நெடுஞ்சாலை இதுபோல் லாரிகள் இரவு நேரத்தில் வரும்போது சிவப்பு விளக்கு லாரி முழுவதும் எரிய விட்டு வந்திருக்க வேண்டும் விபத்து தடுப்பு ரிப்ளேட்டிங் ஸ்டிக்கர் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி இருக்க வேண்டும் இவை எவையும் செய்யாமல் வந்த லாரியை கண்காணிப்பு செய்யாமல் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்த போலீசார் கண்காணிப்பு செய்யாமல் மறந்ததே இந்த விபத்திற்கு காரணம் இதே இடத்தில் மற்ற பேருந்துகள் எதுவும் விபத்தில் சிக்கி இருந்தால் அதிக அளவு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் மீண்டும் இது போல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேசிய நெடுஞ்சாலையில் பணியில் ஈடுபடும் போலீசார் தங்கள் கடமையை வாகனங்கள் கண்காணிப்பை தீவிர படுத்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் முன் வரவேண்டும் என்று வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இந்த சம்பவத்திற்கு காரணமான ஜார்கண்ட் மாநில லாரி ஓட்டுனர் தப்பி ஓடி உள்ளார் இவரை தேடும்படியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் காரணமாக திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த பகுதியை ஆந்திர மாநிலம் திருப்பதி செல்வதற்கும் வட மாநிலத்திற்கு செல்வதற்கும் சென்னை திருத்தணி வருவதற்கும் வாகனங்கள் கடப்பதற்கு மிக சிரமமாக ஏற்பட்டு வாகனம் நெரிசலும் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.