ஆட்டோ ஓட்டுநர் பெண் காவலரை தகாத வார்த்தையால் பேசியதாக புகார்
ஆட்டோ ஓட்டுநர் பெண் காவலரை தகாத வார்த்தையால் பேசியதாக புகார்;
திருத்தணியில் முருகன் கோயில் மலை மீது ஆட்டோ ஓட்டுநர் தன்னை தகாத வார்த்தையில் திட்டிவிட்டார் என்று போக்குவரத்து காவலர் லீலாவதி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் தன்னை போக்குவரத்து காவலர் லீலாவதி அடித்துவிட்டார் என்று ஆட்டோ ஓட்டுனர் தீன் என்பவர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.எஸ்.பி கந்தனிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் மலை மீது என்று பக்தர்கள் மற்றும் பக்தர்கள் எடுத்து வரும் வாகனங்கள் போக்குவரத்து சரி செய்யும் பணியில் திருத்தணி போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது மலைப்பகுதியில் பணியில் இருந்த லீலாவதி என்ற பெண் காவலர் ஆட்டோக்கள் வரைமுறை இல்லாமல் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அப்படியே நில்லுங்கள் என்று கூறியுள்ளார் அப்போது தீன் என்பவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார் நிற்காமல் சென்றதால் அந்த ஆட்டோவை போக்குவரத்து காவலர் லீலாவதி புகைப்படம் எடுத்துள்ளார் ஏன் புகைப்படம் எடுக்கிறாய் என்று ஆட்டோ ஓட்டுநருக்கும் போக்குவரத்து காவலர் லீலாவதிக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் தகாத வார்த்தையில் ஆட்டோ ஓட்டுநர் தீன் பேசி விட்டதாக திருத்தணி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலர் லீலாவதி நடந்தவற்றை அப்படியே எழுத்து வடிவில் புகார் அளித்துள்ளார் ஆட்டோ ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு போலீசை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும்பிரபரப்பை ஏற்படுத்தியது இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் தீன் lpf தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களும் மற்றும் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தை சார்ந்தவர்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து திருத்தணி டிஎஸ்பி கந்தன் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருத்தணி டிஎஸ்பி கந்தனிடம் கடும் வாக்குவாதம் மேற்கொண்டனர் மேலும் போக்குவரத்து காவலர் லீலாவதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் விசாரித்து விட்டு நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி கந்தன் தெரிவித்தார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நாளை போராட்டம் மேற்கொள்வோம் தற்போது இதற்கான பதில் கிடைக்கவில்லை என்றால் சாலை மறியல் செய்வோம் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் தெரிவித்ததால் வரம்பு மீறி தாங்கள் யாரும் செய்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இந்த சம்பவம் தாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொள்வார் என்று டிஎஸ்பி கந்தன் தெரிவித்தார் இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர் இந்த சம்பவத்தின் காரணமாக மலைக்கோவில் முதல் டிஎஸ்பி அலுவலகம் வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது....