குன்னூர் பழைய அருவுங்காடு சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு:

மக்கள் அவதி;

Update: 2025-06-02 14:06 GMT
குன்னூர் பழைய அருவுங்காடு சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதி நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் அருகே உள்ள பழைய அருவங்காடு சாலையில் இன்று முற்பகலில், மூலிகை மரம் ஒன்று மையச்சாலையில் திடீரென விழுந்ததால் போக்குவரத்துக்கு பெரும் தடையாக அமைந்தது போக்குவரத்து பாதிக்க பட்டது பழைய அருவங்காடு சாலை, குன்னூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை இணைக்கும் முக்கிய பாதையாக இருந்ததால், இந்த மர விழுதல் சம்பவம் அன்றாடப் பயணிகள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பெரும் அவதியை உருவாக்கியது அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. மரம் விழுந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் வனத்துறை, தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகுாமரம் வெட்டி அகற்றும் பணிகள் முடிக்கப்பட்டன. மரக்கசைகளை அகற்றி சாலை சீரமைக்கப்பட்டபின் போக்கு வரத்து சீரானது

Similar News