ஊட்டியில் மீண்டும் தலை தூக்கும் டிஜிட்டல் பேனர்கள் சுற்றுச்சூழலுக்கு சவால் என இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி
சுற்றுச்சூழலுக்கும், ஊட்டியின் இயற்கை அழகுக்கும் மிகப்பெரிய ஆபத்தாக மாறுகிறது,” என்கிறார் ஒரு இயற்கை ஆர்வலர்;
ஊட்டியில் மீண்டும் தலை தூக்கும் டிஜிட்டல் பேனர்கள் சுற்றுச்சூழலுக்கு சவால் என இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி “தழைமரக் காடுகளும், மலர் மண்டபங்களும், இயற்கையின் வாசலும் நம்ம ஊட்டி” என்று பெருமிதம் கொண்ட நகரத்தில், சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகள் இயற்கை அழகையே மாசடையச் செய்துள்ளன. நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெளிவாக தடை செய்திருந்தாலும், நகரின் பல பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் மீண்டும் வெளிப்படையாக தொங்குகின்றன. இதனால், சுற்றுச்சூழலியலாளர்கள், பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஊட்டி ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மட்டுமல்லாது, பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாகவும் வகிக்கிறது. இதன் இயற்கை சூழல் பாதுகாக்க, 2022 முதல்,பெரிய அளவிலான வணிக பேனர்கள் • பிளாஸ்டிக் மற்றும் வினைலம் போன்று அகற்ற முடியாத பொருட்களில் தயாரிக்கப்பட்ட பேனர்கள் • காட்சிக்கு இடையூறாக அமைந்தும், மரங்கள் மற்றும் பறவைகள் வாழ்விடம் மீது தாக்கம் ஏற்படுத்தும் வகை பேனர்கள் இவை அனைத்தும் தடை செய்யப்பட்டன. மாவட்ட நிர்வாகம் 2023ல் கூடுதலாக, டிஜிட்டல் பேனர்கள் (LED, Vinyl Flex, Backlit Hoardings) மீது முழுமையான தடை விதித்தது. “ஊட்டி என்பது ஒரு இயற்கை பொக்கிஷம். அதன் மீது வணிக நோக்கங்களால் தாக்கம் ஏற்படக்கூடாது எனபதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது மீண்டும் நகரின் முக்கிய இடங்களான • ஊட்டி பேருந்து நிலைய பகுதி,எட்டின்ஸ்சாலை,கமர்சியல்சாலை, ஏடிசி சதுக்கம் என அனைத்து பகுதிகளிலும் தனியார் நிறுவனங்களின் விளம்பர பேனர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சில அரசியல் சார்ந்த பேனர்கள் என அணிவகுக்கின்றன சில இடங்களில் கூட, இணைய விளம்பர முகவர்கள் தங்கள் நிறுவனங்களின் QR கோடுகள், சலுகைகள் போன்றவற்றையும் வெளியிட்டுள்ளனர். இவை நகரத்தின் இயற்கைத் தோற்றத்தையே மாறச் செய்கின்றன. சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுக்கிற இடங்களை கூட இப்படி பேனர்களால் மூடிவிட்டனர்,” எனக் கூறுகிறார் ஒரு சுற்றுலா வாகன ஓட்டுனர். சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆவேசக் கண்டனம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக இயக்கங்களும் குரல் எழுப்பியுள்ளனர். “பத்தோ, இருபது பேனர்கள் அல்ல. இது ஒரு ஒழுங்கற்ற கலாசாரத்தை ஊட்டிவைக்கிறதோடு, நகரத்தின் இயற்கை அழகு மற்றும் பல்லுயிர் வாழ்வையும் கேள்விக்குறியாக்குகிறது,” என்கிறார் நீலகிரி சூழல் கவசம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை காக்கும் நோக்கில், பெருமளவில் சுற்றுலா பயணிகள் வரும் ஊட்டி பகுதிகளில், டிஜிட்டல் பேனர்கள் மற்றும் வணிக விளம்பரங்களை அரசு தடை செய்துள்ள நிலையில் சமீபமாக நகரின் முக்கிய வீதிகளில் மற்றும் சுற்றுலா முக்கிய இடங்களில், தடை செய்யப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் மறுபடியும் கண்காட்சியாக தோன்றி வருகின்றன. இது இயற்கை ஆர்வலர்களிடம்் அதிர்வையும், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்களிடையே கடும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தடை இருந்தும், விளம்பர பேனர்கள் பூமி பிடிக்கும் நிலை இது சுற்றுச்சூழலுக்கும், ஊட்டியின் இயற்கை அழகுக்கும் மிகப்பெரிய ஆபத்தாக மாறுகிறது,” என்கிறார் ஒரு இயற்கை ஆர்வலர்