தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (ஜூன் 3) நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ் சுடலை கண்ணு தலைமையில் நாங்குநேரி ஓசானம் அன்பு இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.