திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணை நீர் இன்று (ஜூன் 3) திறக்கப்பட்டது. இன்று முதல் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வரை அதாவது 122 நாட்கள் பாசனத்திற்காக இந்த தண்ணீர் விடப்படும். இவ்வாறு தண்ணீர் விடப்படுவதன் மூலம் 46,786 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.